நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் விழா தொடங்கியது

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் புகழ்பெற்ற ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அம்பாள் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடி பட்டம் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, அம்பாள் சன்னதி கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வேதமந்திரங்கள் முழங்க, பஞ்ச வாத்தியங்கள் இசைக்க திருவிழா கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி