நெல்லை நரிக்குறவர் காலனியில் பயங்கர தீ விபத்து

நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனியில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏராளமான நரிக்குறவர்களின் குடிசைகள் எரிந்து நாசமானதுடன், 40-க்கும் மேற்பட்ட கோழிகளும் கருகி உயிரிழந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி