திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். ஏர்வாடி மெயின் ரோடு மற்றும் தெருக்களில் நாய்கள் அதிகமாக காணப்படுவதால், நகராட்சி நிர்வாகம் தெருநாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.