களக்காடு அருகே பத்மநேரி கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுனர் பிச்சையா இசக்கி(21) கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டப்பட்டு கை துண்டானது. கையை மீட்டெடுத்த போலீசார், ஐஸ் பேக்கில் வைத்து பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு 10 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் துண்டிக்கப்பட்ட கையை வெற்றிகரமாக ஒட்ட வைத்து சாதனை படைத்துள்ளனர்.