களக்காடு அருகே பணப் பிரச்சனையில் கடந்த 2022ம் ஆண்டு கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை தவசிக்கனி (63) என்பவர் அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்தார். இந்த வழக்கு நாங்குநேரி சார்பு நீதிமன்றத்தில் நேற்று இறுதி விசாரணைக்கு வந்தபோது, தவசிக்கனிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு நீதிபதி ராமதாஸ் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.