நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தை சேர்ந்தவர் இசக்கியப்பன் (19). தச்சுத்தொழிலாளியான இவர் நெல்லையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவியுடன் பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. செல்போன் மூலம் இருவரும் ரகசியமாக பேசி வந்தனர். இதையறிந்த பெற்றோர் செல்போனை பறித்தனர். மாணவியுடன் பேசமுடியாததால் இசக்கியப்பன் ரகசியமாக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்தனர்.