திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஆறுமுகம்பட்டி நாடார் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் 88வது மாநில அளவிலான லெவன்ஸ் கால்பந்தாட்ட போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்று விளையாடின.