நெல்லை: காசோலை வழங்கிய கலெக்டர்

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அடுத்துள்ள கொண்டாநகரத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது பாம்பு கடித்து இறந்தார். இதனால் அவரது குடும்பம் ஆதரவற்று இருந்தது. இது குறித்து தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் தொகைக்கான காசோலையை அவரது குடும்பத்திற்கு இன்று வழங்கினார்.

தொடர்புடைய செய்தி