நெல்லை: மகனை கொல்ல திட்டம்; தாயின் வீடியோவால் பரபரப்பு

டவுனில் இடப்பிரச்னையில் கடந்த மார்ச் மாதம் கொலை செய்யப்பட்ட ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்ஐ ஜாகிர் உசேன் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி நூர்நிஷா உள்பட 5 பேர் கைதாகி, நூர்நிஷா ஜாமீனில் வந்துள்ளார். இந்நிலையில், தனது கணவரைப் போலவே தனது மகன் இஜூர் ரகுமானையும் கொலை செய்ய சதி நடப்பதாக ஜாகிர் உசேன் மனைவி இன்று (நவம்பர் 2) வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி