தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் மலை கோயிலில் வருகிற 29ஆம் தேதி நடைபெறவிருக்கும் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்த முக்கிய நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செயல் அலுவலர் சுந்தரி மற்றும் ஏராளமான பக்தர்கள், பொதுமக்களில் அன்பர் பணி செய்யும் குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.