தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் மூன்றாவது நாளான இன்று, டிராக்டர்களில் மஞ்சள் பொடி கலந்த தண்ணீர் நிரப்பப்பட்டு, ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் உற்சாகமாக ஒருவருக்கொருவர் ஊற்றி மஞ்சள் நீராட்டு விழாவைக் கொண்டாடினர். இந்த விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் ஒக்கலிங்க சமுதாயத்தினரால் ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.