தேனி மாவட்டம் போடி 2-வது வார்டு பள்ளிவாசல் அருகே மரம் விழுந்து வீடு சேதமடைந்த மூதாட்டி மாரியம்மாளுக்கு போடி திமுக நகர செயலாளர் புருசோத்தமன் தலைமையில் வீட்டை சீரமைக்க நிதி உதவியும், அரிசி, பருப்பு, போர்வை, பாய் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. வீட்டை இழந்து துயரத்தில் இருந்த மூதாட்டிக்கு இந்த உதவி ஆறுதல் அளித்தது.