தேனி மாவட்டம் போடியில், காபி வாரியம் மூலம் காபி தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகளின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள், போடி காபி வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, தேவையான ஆவணங்களுடன் நவம்பர் 20-ஆம் தேதிக்குள் போடி காபி வாரிய விரிவாக்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என போடி காபி வாரிய துணை இயக்குனர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.