தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்காக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த தண்ணீரை திறந்து வைத்துள்ளனர். தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.