ஆண்டிபட்டி ஓடைத் தெருவில் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயிலில் இன்று (ஆகஸ்ட் 16) காலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வடை, பழம், கேசரி போன்ற பிரசாதங்கள் அஞ்சநேயருக்கு படைக்கப்பட்டன. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.