ஆண்டிபட்டி: ஆடுகள் திருட்டு; போலீசார் விசாரணை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மறவபட்டியை சேர்ந்தவர் முத்து இருளன். இவர் பல ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். தனக்கு சொந்தமான 30 ஆடுகளை மேய்த்து விட்டு சம்பவதினத்தன்று இரவு அவைகளை கொட்டத்தில் அடைத்துவிட்டு மறுநாள் காலை சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு 28,000 ரூபாய் மதிப்பிலான 4 ஆடுகளை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி