நாளை (செப்.8) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் தமிழக ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனும், இண்டியா கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். மக்களவையில் பாஜக கூட்டணிக்கு 293 எம்பி-களும், மாநிலங்களவையில் 132 எம்பி-களும் உள்ளனர். இண்டியா கூட்டணிக்கு மக்களவையில் 234 எம்பி-களும், மாநிலங்களவையில் 78 எம்பிகளின் ஆதரவும் உள்ளது. இதர 45 கட்சி எம்பி-களில் நடுநிலை வகிப்பதாக அறிவித்துள்ளனர்.