காசாவில் நடைபெறும் இனப்படுகொலை சம்பவம் மனதை உலுக்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைத்த கூட்டத்தில், பாலஸ்தீனத்தின் கலாச்சார அடையாளமான 'கெஃபியா' அணிந்து அவர் இன்று (அக்.8) கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், "காசா போரில் இதுவரை 11,000 பெண்கள், 17,000 குழந்தைகள் மற்றும் 175 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் மட்டும் 26 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நன்றி:NewsTamil24/7