மகாராஷ்டிரா: புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட்டில் உள்ள மோஷியில் சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் பிரம்மாண்டமான சிலை கட்டப்பட்டு வருகிறது. இச்சிலை கட்டி முடிக்கப்பட்டதும், சத்ரபதி சம்பாஜி மகாராஜுக்காக கட்டமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான சிலையாக இது இருக்கும். 180 அடியில் உருவாக்கப்பட்டு வரும் இச்சிலைக்கு மரியாதை செலுத்தும் விதமாக 100க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற தோல்-தாஷா குழுக்களின் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வு லண்டன் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது