இன்று வானில் நடக்கும் அதிசயம்.. மிஸ் பண்ணிடாதீங்க

வானில் சூப்பர் மூன் எனப்படும் முழு நிலவு இன்று (நவ.5) தென்பட உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் நிலவு பிரகாசமாக இருக்கும். இது பூமிக்கு மிக அருகில் வரும்போது மிகவும் பிரகாசமானதாக தெரியும். இதனை “சூப்பர் மூன்” என வானியல் ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். இந்த ஆண்டின் இரண்டாவது சூப்பர் மூன் இன்று இரவு தோன்றுகிறது. இது பூமியிலிருந்து சுமார் 3 லட்சத்து 57 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் வர உள்ளது. 2025ஆம் ஆண்டில் மொத்தம் 3 சூப்பர் மூன்கள் தோன்றும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி