டெல்லி: ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழ்நாடு அரசு சுரண்டுகிறது என்றும், இலவசங்களுக்கு பணம் இருக்கும்போது பணிபுரிபவர்களுக்கு ஊதியம் தர ஏன் பணம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஒப்பந்த செவிலியர்கள் ஊதியம் தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து, மத்திய அரசு மற்றும் செவிலியர் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. தனித்திட்டத்தை ஏன் தொடங்கக்கூடாது என்றும், ஊதியம் தர வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.