நாளை (நவ.5) வானில் 'பீவர் மூன்' என்று அழைக்கப்படும் சூப்பர் மூன் தோன்றுவதால், ஒரு அரிய வானியல் நிகழ்வை காண தயாராகுங்கள். நிலவு பூமிக்கு மிக அருகில் வரவுள்ளதால், இது வழக்கமான முழு நிலவை காட்டிலும் 14% அதிக பிரகாசத்துடனும், 30% பெரியதாகவும் காட்சியளிக்கும். இதுவே 2025-ஆம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் ஆகும். இந்த மாதத்தில் பீவர் (நீர்நாய்கள்) தங்கள் வீடுகளை கட்டும் பணியை முடிக்கும்போது பௌர்ணமி நிலவு ஒளிர்வதால், இதற்கு 'பீவர் மூன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.