கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின்போது ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்கிய வழக்கில் தவெக உறுப்பினர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். கரூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்த மணிகண்டன் என்ற உறுப்பினர், முன்ஜாமின் கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால், தற்போது வரை முன்ஜாமின் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.