தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "நம் அன்னை தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது. சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் அத்தனையையும் அச்சமின்றி உடைத்தெறிவோம். வருங்காலம் நமதென்று காட்ட, தீர்க்கமாகத் திட்டமிடுவோம்" என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தவெகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ள இந்த கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.
நன்றி:NewsTamil