சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட 49 கட்சித் தலைவர்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கத்தோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் SIR-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை” என குறிப்பிட்டுள்ளார்.