தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள புகழ்பெற்ற திருப்பனந்தாள் காசிமடத்தின் 21வது அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள், வயது மூப்பால் உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு மகா சமாதி அடைந்தார். 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையும் பெருமையும் கொண்ட காசிமடத்தை பல்துறை விரிவாக்கம் செய்து பொற்காலமாக மேம்படுத்திய இவரது நல்லடக்கம் புதன்கிழமை மாலை மேற்குத் தெருவில் உள்ள குரு மடத்தில் நடைபெறும்.