தஞ்சாவூா்: புதிய வகுப்பறை கட்டடம் கட்ட அமைச்சா் அடிக்கல்

தஞ்சாவூா் மாவட்டம், அம்மன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கட்டட வசதி இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்தனர். இந்நிலையில், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 34.60 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அடிக்கல் நாட்டினார்.

தொடர்புடைய செய்தி