பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றம்

தஞ்சை அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா மே 6-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கும்பகோணம் ஆயர் ஜீவானந்தம் கொடியேற்றி விழாவைத் தொடங்கி வைக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி மே 14-ந்தேதி இரவு நடைபெறுகிறது. மே 15-ந்தேதி காலை திருவிழா திருப்பலி மற்றும் மாலை கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. இதற்காக பேராலயம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி