தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரிடம் கிராம மக்கள் மனு

பள்ளியக்ரஹாரம் பெரியத் தெருவில் சுவாமிகள் நிறுத்தும் இடத்தில் சுகாதார வளாகம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கிராம மக்கள் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். 

இதுதொடர்பாக, நாட்டாண்மைகள் திருஞானம், ரங்கநாதன்,அன்புச் செல்வன், ஆரோக்கியதாஸ், காமராஜ் உள்ளிட்ட கிராம மக்கள், மாநகராட்சி ஆணையர் கண்ணணிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாநகராட்சி 1-வது வார்டில் உள்ள பள்ளியக்ரஹாரம் பெரிய தெருவில் அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த 200 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். 

இங்கு பழமையான உக்கிரகாளியம்மன் கோயில், அடைக்கல அன்னை ஆலயம் ஆகிய 2 வழிபாட்டுத் தலங்களின் சுவாமிகள் மற்றும் அடைக்கல அன்னை ஆகியோர் புறப்படும் இடம். தேர்கள், சுவாமிகள் நிறுத்தும் இடம் உள்ளது. இந்நிலையில், அந்த இடத்தில், மாநகராட்சி நிர்வாகம், சுகாதார வளாகம் கட்டுவதற்கு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

எனவே, மாநகராட்சி நிர்வாகம், சுவாமிகள் நிறுத்தும் இடத்தில் சுகாதார வளாகம் கட்டுவதைக் கைவிட வேண்டும். இல்லையெனில் கிராம மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதில் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி