இந்து எழுச்சி பேரவை மாநில பொதுச் செயலாளர் சதீஷ் கண்ணா மற்றும் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, தஞ்சை கீழவாசல் பெரிய கோட்டை நுழைவுப் பகுதியில் பொதுமக்கள், சமூக நலன் விரும்பிகள், ஆன்மீக அன்பர்களின் எதிர்ப்பை மீறி முறையான எந்த ஒரு சட்ட நெறிகளையும் பின்பற்றாமல் பாதுகாக்கப்பட்ட சின்னமான அகழியின் நீர்நிலை கரையை ஆக்கிரமிப்பு செய்து மீன் சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
புராதன அகழி நீர்த்தேக்கத்தை மீன் சந்தையில் கடை வைத்துள்ளவர்கள் அசிங்கப்படுத்தி வருகின்றனர். வெள்ளை பிள்ளையார் கோவில் கோவில் மதில் சுவரை ஒட்டி மீன் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. வலது புறம் 30 மீட்டர் தொலைவில் புனிதமிக்க பழமை வாய்ந்த யோக நரசிம்மர் கோவில் உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய பீரங்கியாக உள்ள ராஜகோபால பீரங்கி மேடை இந்த இடத்திலிருந்து 15 மீட்டர் தொலைவில் உள்ளது.
மேலும் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்ட அகழி கரையில் பெரிய கோட்டைக்குள் இந்த சந்தை அமைக்கப்பட்டுள்ளது. எனவே அனைவருக்கும், அனைத்து வகையிலும், இடையூறாக உள்ள இந்த மீன் சந்தையை வேற இடத்திற்கு மாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.