தஞ்சாவூர், கடலூரில் நவம்பர் இறுதியில் புயலுக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வட மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், அதனையொட்டிய பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். 15ஆம் தேதியில் இருந்து மீண்டும் பருவமழை தீவிரம் அடையும். மேலும், 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் புயலுக்கான வாய்ப்பு உள்ளது. இந்த புயலினால் அதி கனமழை பெய்து, பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி