தஞ்சாவூர்: சங்கடஹர சதுர்த்தியையொட்டி வரதமகா கணபதிக்கு சிறப்பு அலங்காரம்

தஞ்சாவூர் மேலவீதி பங்காரு காமாட்சி அம்மன் கோவிலின் நுழைவாயில் தென்புறம் புகழ்பெற்ற வரதமகா கணபதி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் பக்தர்கள் பிரதி சங்கடஹர சதுர்த்தி தோறும் பாலாபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதன்படி நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வரதமகா கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வர கணபதியை தரிசனம் செய்தார்கள்.

தொடர்புடைய செய்தி