கள்ளிவயல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாயிஸ் அக்ரம் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில், முரளி (30), குமார் (32), ராஜா (53) ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றபோது, கடந்த அக்டோபர் 16ஆம் தேதி படகின் இன்ஜின் பழுதானதால் இலங்கை கடல் எல்லையான யாழ்ப்பாணம் மாவட்டம் அனலைத்தீவுக்குச் சென்றனர். அங்கு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தவறுதலாக வந்ததாகக் கூறிய நீதிபதி, மூவரையும், படகையும் பத்திரமாக சர்வதேச கடல் எல்லை வரை கொண்டு வந்து விட உத்தரவிட்டார்.