பேராவூரணி அருகே முடச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் மகன் ரமேஷ் (45) என்ற கட்டடவேலை பார்க்கும் தொழிலாளி, ஆவுடையார் கோவில் சாலையில் உள்ள ஊமத்தநாடு ஏரிக்கு செல்லும் வாய்க்கால் பாலத்தின் மீது அமர்ந்து மது அருந்திவிட்டு உணவு சாப்பிட்டுள்ளார். போதையில் தடுமாறி பாலத்தின் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், போலீசார் ரமேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.