கோடைகாலம் ஆனாலும் வற்றாமல் எப்போதும் தண்ணீர் இந்த சிங்கப்பெருமாள் கோயில் குளத்தில் இருந்து கொண்டே இருக்கும். தற்போது மீன் வளர்ப்பு ஏதும் நடைபெறாததால் இக்குளம் தொடர்ந்து பல மாதங்களாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. முக்கியமாக இப்பகுதியில் வசிக்கும் ஒரு சிலர் குளத்தில் அதிகளவில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இவ்வாறு சிலர் செய்யும் செயல்களால் குளம் நாசமடைந்து வருகிறது. பழமையான இந்த குளத்தில், குப்பைகள் கொட்டுவதையும் கழிவுநீர் விடுவதையும் தடுத்து நிறுத்தி, குளத்தை சுற்றி தடுப்புச்சுவர் அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களும் பழமையான இந்த குளத்தின் அருமை தெரிந்து அதனை பாதுகாக்க முன்வர வேண்டும்.
“அவசர தீர்ப்பை எதிர்த்து கண்ணகி நீதி கேட்ட மண்” - முதலமைச்சர் பேச்சு