தஞ்சாவூா் மாவட்டத்தில் சுதந்திர தினமான வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அளிக்காத 99 நிறுவனங்களுக்கு தொழிலாளா் துறையினா் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், தேசிய பண்டிகை விடுமுறை நாளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும். இதற்காக 158 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில், 99 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, இணக்க கட்டண அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.