தஞ்சாவூர்: குழந்தைகளுக்கு தடுப்பூசி; சிறப்பு முகாம்

தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையில் மொத்தம் 11 வகை தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம்பிள்ளை வாதம் கக்குவான், இருமல் ரணஜன்னி, தொண்டை அடைப்பான், நிமோனியா வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளை காய்ச்சல், விட்டமின் ஏ குறைபாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. 

இந்த விடுபட்ட உரிய தவணையில் தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளுக்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வரும் 31 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படும். இதில் பெண்டாவாலன்ட் தடுப்பூசி மட்டுமின்றி ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தின் கீழ் விடுபட்ட மற்ற தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளலாம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 9.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி