நோய் கொடுமையால் தொழிலதிபர் தற்கொலை: பட்டுக்கோட்டையில் சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கண்டியன்தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் கவாஸ்கர் (44) உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி