தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில், ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ வள்ளி சுப்பிரமணியர், காமாட்சி அம்மன், பேச்சியம்மன், வீரனார், முனீஸ்வரர், அய்யனார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகள், வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கிய இந்த விழாவில், புனிதநீர் கலசங்கள் கோவிலை சுற்றி வலம் வந்து, சுவாமிகள் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.