பாபநாசத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மேலவீதி அண்ணா சிலை அருகில் அரையபுரம் தட்டுமால் படுகையில் சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி ரயத்வாரி பட்டா வழங்கும் வரை சமைத்து உண்டு உறங்கும் காத்திருப்பு போராட்டம் மாவட்ட விவசாய சங்க செயலாளர் சாமுதர்மராஜன் தலைமையில் நடைபெற்றது. 

விவசாயிகள் செல்வராஜன், ரவிசௌந்தர்ராஜன், ராமராஜன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் பிரேம்நாத் பைரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பாரதி, மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், ஏஐடியுசி மாநில செயலாளர் தில்லைவனம், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் பொன்னுசேகர், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய பொறுப்பாளர்கள் கனகராஜ், பொய்யாமொழி, பாலாஜி, புகழேந்தி, ஜீவாநந்தம், தேவேந்திரன், ஜெகத்ரட்சகன், ராஜேஷ், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். 

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் கும்பகோணம் நகர நிலவரித்திட்ட தனிவட்டாட்சியர் கலைச்செல்வி, மண்டல துணைவட்டாட்சியர் பிரபு, பாபநாசம் போலீஸ் துணைகண்காணிப்பாளர் முருகவேல், பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஅன்பரசு, சார்ஆய்வாளர் மூகாம்பிகை ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி