ஒரத்தநாடு: மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

ஒரத்தநாடு அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 16 வயது உடைய 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து அந்த மாணவியின் தந்தை பாப்பாநாடு போலீசில் புகார் அளித்தார். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் மாயமான மாணவியையும், அவரை ஏமாற்றி வெளியூருக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்திய ஓரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 27) என்பவரையும் போலீசார் பிடித்து பாப்பாநாடு காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து விசாரணை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட மாணவி 2 மாதங்கள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை போக்சோ வழக்காக மாற்றம் செய்தனர். பின்னர் ராஜமாணிக்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி