தஞ்சை: மேற்கூரை பெயா்ந்து விழுந்து விஏஒ உள்பட 3 போ் காயம்

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்திற்குட்பட்ட நெய்வாசல் தென்பாதி கிராமத்தில் உள்ள விஏஓ அலுவலகத்தில் தலையமங்கலம் விஏஓ நடராஜன் (36) பணியில் ஈடுபட்டிருந்தபோது, நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் (73) மற்றும் பாண்டியன் (55) ஆகியோர் சிட்டா அடங்கல் பெற வந்திருந்தனர். அப்போது அலுவலக மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் மூவரும் காயமடைந்தனர். அவர்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி