கும்பகோணம்: அகோரி மணிகண்டன் சுவாமி தரிசனம்

அகில பாரத இந்து மகா சபாவின் மாநில துணைத்தலைவர் திருச்சி அகோரி மணிகண்டன் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது, மொட்டை கோபுரம் வருத்தம் அளிப்பதாகவும், அதை விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், மகாமக குளம் தேசிய திருவிழாவாக அறிவிக்க அகோரிகள் இந்து மகா சபையுடன் இணைந்து செயல்படுவார்கள் என்றும், மகாமக பெருவிழாவில் ஒரு லட்சம் அகோரிகளை அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்வேன் என்றும் தெரிவித்தார். மாநில பொதுச் செயலாளர் இராம நிரஞ்சன் மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி