தமிழகத்தில் மு. க ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, இதுவரை 34 புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 64 அரசு கலைக்கல்லூரிகளில் 2வது சிப்ட் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் 20ம் தேதி டிஆர்பி மூலம் தேர்ச்சி பெற்ற 2,704 பேர் நிரந்தர பேராசிரியர்களாக பணி நியமனம் செய்யப்படவுள்ளனர் என்றும் அவர் கூறினார்.