தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே தேவிபட்டினம் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு தட்டாங்குளம் காளியம்மன் கோவில் உண்டியல் பணத்தை இந்து அறநிலைத்துறை செயல் அலுவலர் கேசவ ராஜன் , இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் முருகன் , எழுத்தர் குமார் மற்றும் உண்டியல் பணத்தை எண்ணும் இந்து அறநிலைத்துறை குழுவினர் , உண்டியல் சீலை உடைத்து பணத்தை எண்ணிக்கை செய்ய முயன்ற போது , ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் , திமுக கிளை கழகச் செயலாளர் முருகன், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருக்கோவிலுக்கு அடிப்படை வசதிகளான , கழிவறை சுகாதாரமான குடிநீர் மற்றும் தெப்பக்குளத்தை தூர்வாரி கோயிலைச் சுற்றிலும் சுத்தமாக வைத்திருத்தல் போன்ற அடிப்படை வசதிகளை செய்யாமல் , உண்டியல் பணத்தை எண்ணக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்,
இதனால் இந்து அறநிலை துறை அதிகாரிகள் உண்டியலை மீண்டும் சீல் வைத்து , இனி அடிப்படை வசதிகளை செய்யாமல் உண்டியல் பணத்தை எடுக்க வர மாட்டோம் என்று உறுதி அளித்தனர்.
இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாடசாமி ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீரத் லிங்கம் , 12 வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.