தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ எலுமிச்சை விலை 35 முதல் 40 ரூபாய் வரை குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.