தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணியில் உள்ள செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அகத்தியர் கோவிலில் ஆடி மாத முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இதில் விரதமிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் முளைப்பாரிகளை தலையில் ஏந்தி, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று குளத்தில் கரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.