தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் நேற்று குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இக்கண்காட்சியில் சுய உதவிக் குழுக்களின் பல்வேறு உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.