தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 12 நாட்கள் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான ஐப்பசி திருக்கல்யாணம் நவம்பர் 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. விழா நாட்களில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் மற்றும் மண்டக படிதாரர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.