தென்காசி கோர விபத்து: முதல்வர் இரங்கல்

கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்ததாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்களைத் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளார். இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி